2023-03-16 322

அதான் சொன்ன பின்னர் தான் நோன்பு திறக்க வேண்டுமா?

கேள்வி:  அதான் சொன்ன பின்னர் தான் நோன்பு திறக்க வேண்டுமா?

பதில் : புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது.ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதான் சொல்லும் வேளையில் முஅத்தின் கூறுவதைப் போன்று கூற சொல்லி உள்ளார்கள் எனவே அதான் சொல்லப்படும் வேளையில் அதற்குப்  பதில் சொல்வது கடமையாகும். ஆகையால் அதானிற்கு பதில் கூறி  துஆவும் ஓதிய பின்னர் தான் இஃப்தார் செய்ய வேண்டுமா? எனக் கேட்கின்றனர்.

நபி (ஸல்லல்லாஹு   அலைஹி வஸல்லம் அவர்கள்  "நோன்பு திறப்பதை விரைவுபடுத்தும் வரை மக்கள் நன்மையில் இருந்துகொண்டே இருப்பார்கள்" எனக் கூறினார்கள். (புகாரி: 1957)

அதான் மஹ்ரிப் நேரம் தொடங்கிவிட்டது சூரியன் மறைகின்றது என்பதை உணர்த்துவதற்காகும் நோன்பு திறப்பதை அவசரப்படுத்த வேண்டும் என்றால் சூரியன் மறையும் போது நோன்பு திறக்க வேண்டும் என்பதாகும். நோன்பு திறப்பதென்றால் கட்லட், பெட்டிஸ், ஈச்சம்பழம், கஞ்சி எல்லம் சாப்பிட்டு திறப்பதல்ல, ஒரு துண்டு ஈச்சாம்பழமோ அல்லது ஒரு மிடர் தண்ணீரோ குடித்தாலோ நோன்பை திறந்ததாகிவிடும்.

எனவே அதான் சப்தம் கேட்டால் வாயில் ஈச்சம்பழத்தை போட்டுக்கொண்டு பதில் கூறலாம் சாப்பிட்டுக்கொண்டு பதில் கூறக்கூடாது என்று மார்க்கம் கூறவில்லை, அதாவது சில காரியங்களை செய்து கொண்டு பதில் கூறமுடியும், என்றாலும் இன்னொருவருடன் கதைத்துக்கொண்டிருக்கும் வேளையில் அதானை சரியாக அவதானிக்க முடியாது, சரியான முறையில் பதில் கூறமுடியாது என்பதற்காகவே அதான் சொல்லும் போது கதைக்க வேண்டாம் என்கின்றோம்.

அவ்வாறு உங்களிற்கு சாப்பிட்டுக்கொண்டு பதில் கூறுவது கஷ்டம் என்றால் ஒரு துண்டு ஈச்சம்பழத்தை சாப்பிட்டுவிட்டு அல்லது ஒரு முடல் தண்ணீரை குடித்து விட்டு அதான் முடிந்ததும் ஏனையவற்றை சாப்பிடலாம், மாறாக எல்லாவற்றையும் சாப்பிட்டால் தான் நோன்பு திறக்கலாம் என்று இல்லை.

எனவே, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் நோன்பு திறப்பதை விரைவுபடுத்தும் வரை மக்கள் நன்மையில் நிலத்திருப்பார்கள்" என்ற ஹதீஸ் நோன்பை உரிய நேரத்தில் அவசரமாக திறப்பது என்பதனையே குறிக்கின்றது , அதே நேரம் அதானிற்கும் பதில் கூறமுடியும், அதானிற்கு பதில் கூறி, அதானிற்கு துஆவும் ஓதிய பின்பு தான் நோன்பு திறக்க வேண்டும் என்பது அவசியமில்லை மாறாக அது பிழையாகும், ஏனென்றால் அது நபியவர்களின் ஹதீஸிற்கு மாற்றமானதாகும்.

எனவே நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையைத்தான் அல்லாஹ் விரும்புகின்றான், 

சில பிரதேசங்களில் அதானின் சத்தம் கேட்காது, அப்போது அங்கே உள்ளவர்கள் ஒரு முடல் தண்ணீரால் நோன்பை திறந்து விட்டு அதான் சொல்லிக் கொள்ளலாம் அவ்வாறே அதான் சொல்பவரும் செய்வார் அதான் சொன்ன பிறகு ஏனைய உணவை சாப்பிட்டுக்கொள்ளல்லாம்.

அல்லாஹ் நம் அனைவரிற்கும் அவனது மார்க்கத்தை தூய்மையான வடிவில் புரிந்து கொள்ள நல்லருள்பாலிப்பனாக! அல்லாஹ் தஆலா மிக அறிந்தவன். 

பதில் : மௌலவி MI. அன்சார் (தப்லீகி) அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபுக் கல்லூரி)