2022-12-11 389

ஜும்ஆவுக்கு போகாத பெண்கள் ழுஹர் தொழுகையை நிறைவேற்ற வேண்டியது எப்போது?

ஜும்ஆவுக்கு போகாத பெண்கள் ழுஹர் தொழுகையை நிறைவேற்ற வேண்டியது எப்போது?

பதில்: அல் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா முஹம்மதின் வ அலா ஆலிஹி வ ஸஹ்பிஹி அஜ்மஈன். அம்மா பஃத்,

ஜும்ஆவுக்கு போகாத பெண்கள் வீட்டில் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஜும்ஆ குத்பா காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.  இவர்கள் ழுஹர் தொழுகையை தொழ வேண்டிய நேரம் என்ன? குத்பா முடிந்த பிறகுதான் தொழ வேண்டுமா? அல்லது ழுஹர் அதான் சொன்ன உடனேயே  தொழுது கொள்ளலாமா? என சில சகோதரர்கள் கேட்கின்றனர்.

பெண்கள் ஜும்ஆ தொழுகைக்கு சமூகமளிப்பது கடமையில்லை. ஆனால், அதில் கலந்து கொள்வது அவர்களுக்கு தடையுமில்லை. எனவே, ழுஹர் தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது தான் பெண்களுக்கு கடமையாகும். 

அந்த வகையில், ழுஹர் தொழுகையை எப்போது தொழுவது எனின் ழுஹருக்குரிய அதான் சொன்ன உடன் ழுஹர் தொழுகைக்கான நேரம் ஆரம்பமாகிறது. 

ஆகவே, ஜும்ஆ நாட்களில் ழுஹருக்குரிய அதான் சொல்லப்பட்டால் வீட்டில் உள்ள பெண்கள் ழுஹர் தொழுகையை தொழுதுகொள்ளலாம். அவர்களது வீடு ஜும்ஆ உரை காதில் ஒலிக்கும் வண்ணம் பள்ளிக்கு மிக அண்மையில் இருந்தாலும் சரியே.

பெண்கள் ஜும்ஆவிற்கு பள்ளிக்கு சமூகமளிக்கும் பட்சத்தில் தான் ஜும்ஆ குத்பாவை செவிமடுப்பார்கள், இமாமை பின்பற்றி ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றுவார்கள்.

அவ்வாறு பெண்கள் ஜும்ஆவிற்கு சமூகம் தரவில்லை என்றிருந்தால்- அவர்களுக்கு கடமையாகுவது ழுஹர் தொழுகை தான் என்கின்ற அடிப்படையில் ழுஹருக்குரிய அதான் ஒலித்ததும் ழுஹர் தொழுகையை நிறைவேற்றிக்கொள்வார்கள். விரும்பினால் அவர்கள் வீட்டில் இருந்தவறே ஜும்ஆ குத்பாவையும் செவிமடுக்கலாம். அல்லாஹ் தஆலா எனக்கும் உங்களுக்கும் புரிந்து நடக்க நல்லருள்பாலிப்பானாக.

 

பதில் : மௌலவி MI. அன்சார் (தப்லீகி) 

அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபிக் கல்லூரி)

எழுத்தாக்கம் : உம்மு அப்தில்லாஹ் (ஷரயிய்யா