2021-12-21 549

ஜனாஸாவை குளிப்பாட்டியவர் குளிப்பது அவசியமா?

கேள்வி பதில்கள்:-

தனது சகோதரரின் ஜனாஸாவில் கலந்துகொள்வதென்பது ஒரு முஸ்லிம் தனது சகோதரருக்கு செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்றாகவும் மறுமையில் எமது நன்மையை அதிகரிக்கக் கூடிய விடங்களில் ஒன்றாகவும் உள்ளது என்பதை நபி (ஸல்) அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள் அந்த வகையில் ஜனாஸாவைக் குளிப்பாட்டும் காரியத்தில் ஈடுபட்டவர் மீது குளிப்பு கடமையா எனும் விடயத்தைப் பற்றி பார்ப்போம்.

" ஜனாஸாவைக் குளிப்பாட்டியவர் குளித்துக்கொள்ளட்டும் " என்ற அபூ ஹுரைரா (ரழி) அவர்களினூடாக அறிவிக்கப்பட்ட ஹதீதை ஆதாரமாகக் கொண்டால் குளிப்பாட்டியவர் ஜனாஸாத் தொழுகையில் கலந்துகொள்வதற்கு முன்னர் குளித்தக்கொள்வது அவசியம் என விளங்க முடியும் இருப்பினும் இந்த ஹதீஸை ஆதாரமான அறிவிப்பாக கொள்ளும் சில அறிஞர்கள் குளிப்பதை விரும்பத்தக்க ஓர் விடயமாகவே கருதுகின்றனர்.

என்றாலும் நாம் இந்த ஹதீதின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்த வேளையில் இது நபி (ஸல்) அவர்களைத் தொட்டும் ஆதாரமான அறிவிப்பாளர் வரிசையினூடாக அறிவிக்கப்படாத பலவீனமான ஹதீத் என்பதே தெளிவாகின்றது.

எனவே ஜனாஸாவைக் குளிப்பாட்டியவர் குளித்துக்கொள்வது சம்மந்தமாக நபி (ஸல்) அவர்களைத் தொட்டும் எந்தவொரு ஆதாரபூர்வமான ஹதீத்களும் இல்லாததனால் குளிப்பாட்டியவர் குளிப்பது நபி (ஸல்)அவர்களின் வழிகாட்டல் இல்லை என விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஆயினும் குளிப்பாட்டும் வேளையில் ஜனாஸாவின் அவ்ரத்தில் கை பட்டால் வுழூ முறிந்திவிடும் என்பதனால் தொழுகைக்காக மீண்டும் வுழூ செய்து கொள்வது அவசியமாகும் எனவே அல்லாஹ்வின் தூதர் காட்டித் தந்த உன்மையான வழியில் நடந்து அவனின் பொருத்தத்தை பெற அல்லாஹ் நல்லருள்பாலிப்பானக.

பதில்: மௌலவி M.I.அன்சார்(தப்லீகி) அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ கல்லூரி)

எழுத்தாக்கம்: உம்மு நுஹா