2020-05-28 727

முஸ்லிம் சமூகத்தில் பரவியுள்ள ஆதாரமற்ற ஹதீஸ்கள் -- ​யாசீன் சூரத்தின் சிறப்புக்கள் • முஸ்லிம் சமூகத்தில் பரவியுள்ள ஆதாரமற்ற ஹதீஸ்கள்

  ​யாசீன் சூரத்தின் சிறப்புக்கள்

  த்தொடரின் கீழ் பின்வரும் ஹதீஸ்களையும் அதன் அடிப்படையிலான அமலையும் அலசுவோம் 


  ``ஒவ்வொரு பொருளுக்கும் உள்ளம் இருக்கின்றது. அதேபோல் குர்ஆனின் உள்ளம் யாசீன் சூராவாகும். அதை யார் ஒதுகிராரோ அவர் குர்ஆனைப் பத்துத் தடவை ஒருபவரைப் போன்றாவார் " (ஆதாரம் : திர்மீதி, தாரமி. அறிவிப்பவர் அனஸ் (ரழி)

  ஹதீஸ் விமர்சனம் 

 • இந்த ஹதீஸை அறிவித்த ஒரு சில அறிஞர்கள் இது ஆதாரமானது என்று சொல்லியிருந்தாலும் உண்மையில் இது மிகவும் பலவீனமான நம்பகமற்ற ஒரு செய்தியாகும் ஏனெனில் இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறக் கூடிய ``ஹாரூன் அபூ முகம்மத்" என்பவர் இனம்கானப்படாத நம்பகமற்ற ஓர் அறிவிப்பளலாராகும். இவரைப்பற்றி இந்த ஹதீஸை அறிவித்த இமாம் திர்மீதி (ரஹ் ) மற்றும் ஹதீஸ் கலை மேதாவி இமாம் இப்னு ஹஜர் (ரஹ் ) அவர்களும் இவ்வாறே கூறுகின்றனர். இந்த ஹ்தீசைபப்றி இமாம் அபூ ஹாத்திம் அவர்களிடம் அவரின் மகனான அப்துர் ரஹ்மான் கேட்ட சந்தர்ப்பத்தில் பின்வருமாறு பதில் கூறினார்.

  இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் வரக்கூடிய ``முகாத்தில் இப்னு ஹையான்" எனக் குறிப்பிடப்பட்டிருப்பது தவறான குறிப்பாகும். சரியானது ``முகாத்தில் இப்னு சுலைமான்" என்பதேயாகும். (இவர் பொய் கூறக்கூடிய ஒரு அறிவிப்பாளர். இவர் இட்டுக் கட்டிய கிரந்தத்தின் ஆரம்பத்தில் இந்த ஹதீஸை நான் பார்த்துள்ளேன். இது எந்த அடிப்படையுமில்லாத உண்மைக்குப் புறம்பான ஒரு ஹதீஸாகும் 
  ஆதாரம்  - அல் இலல் (இமாம் இப்னு அபீ ஹாத்திமுக்குரியது)

  இங்கு குறிப்பிட்ட முகாத் இப்னு சுலைமான் என்பவர் பொய் கூறக்கூடிய ஒரு அறிவிப்பாளர் என்று இமாம் நஸாயி , இமாம் வகிஹ், இமாம் ஜோஸ்தானி   போன்றோர் தெளிவாகக் குறிப்பிட்டுளார்கள். அதாரம் மீசானுல் இஹ்திதால் (இமாம் தஹபிக்குரியது ) 


  இந்த ஹதீஸில் கூறப்பட்ட இச் செய்தியானது ரசூளுல்ல்லா (ஸல் ) அவர்களால் உண்மையில் சொல்லப்பட்ட ஒரு செய்தியாக மக்கள் மத்தியில் நம்பப்பட்டு வருவதால் பலர் இதனை தம் வாயினால் கூறுவதை நீங்கள் செவியுற்றிருப்பீர்கள். அது மட்டுமன்றி இலங்கை தென்னிந்தியா போன்ற பகுதிகளில் வாழுகின்ற முஸ்லிங்கள் யாசீன் சூரத்துக்கென்று பிரத்தியேகமாக முக்கியத்துவம் கொடுப்பதை நாம் அறிகின்றோம். யாசீன் சூரத்தை மாத்திரம் திருக்குர்ஆனிலிருந்து வேறுபடுத்தி யாசீன் குர்ஆன் என்று தனியாக அச்ச்ட்டு அதை மட்டும்  முக்கியத்துவம் கொடுத்து நாளாந்தம் ஓதி வருவதைக் காண்கின்றோம்.


  குர்ஆனின் எந்தப்பகுதி ஓதப்படாவிட்டாலும் யாசீன் சூரத் ஓதப்பட்டுவிட்டால் முழுக் குர்ஆனையும் ஓதிய நன்மை கிடைக்குமென நம்பியிருப்பதால் குர்ஆனின் பெரும்பகுதி ஓதப்படுவது முஸ்லிம் சமுதாயத்தில் மிகவும் குறைந்துவிட்டது. 

 • இதற்கு ஒரு படி மேலாக இந்த ஹதீஸை உண்மை  என்று நம்பிய மக்கள் தங்களின் அன்றாட வாழ்வில் ஏற்படக் கூடிய சிறப்பான நிகழ்வுகளில் இந்த சூராவை ஓதுவதெற்கென மௌலவி மார்களை அழைத்து அவர்களுக்கு இறுதியில் பணம் கொடுப்பதைப் பார்த்து வருகிறோம்.இது அந்த மௌலவி மார்களுக்கு அவர்களின் வருமானத்திற்கும் பிழைப்பிற்கும் ஒரு வழியாக மாறிவிட்டது.
  சுருக்கமாக ஒரு விடயத்தை தெரிந்து கொள்ளுங்கள் யாசீன் சம்பந்தமாக வரக்கூடிய அதன் முக்கியத்துவம்  குறித்து சிறப்பம்சங்களை சொல்லிக்காட்டும் அனைத்து ஹதீஸ்களும் இட்டுக் கட்டப்பட்டதாக அல்லது பலவீனமானதாகவே கானப்படுகின்றது.
  ரசூலுல்லாஹ் (ஸல் ) அவர்கள் கூறாததை கூறியதாகச் சொல்பவர் அவனுக்குரிய இடத்தை நரகில் எடுத்துக் கொள்வான் என்பதே நபிகளாரின் எச்சரிக்கையாகும். எனவே இவ்வாறான பொய்யான நம்பகமற்ற செய்திகளை நபுவதும் அதன்படி செயலாற்றுவதும் எமக்குப் பயனளிப்பதற்கு மாறாக தீங்கையே விளைவிக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

  குறிப்பு : இதேவேளை ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் சிறப்புக்கள் சொல்லப்பட்ட சில சூராக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஓதுவதை விட்டுவிடக் கூடாது. ``சூரத்துல் பக்கரா, சூரத்துல் ஆல இம்ரான் போன்ற சூராக்களின் சிறப்புக்கள் ஆதாரபூர்வமாக வந்திருப்பதால் அவற்றை ஓதி வருவோம்.

  ``உங்களுடைய வீடுகளை கப்ருகளாக அமைத்துவிடாதீர்கள்" நிச்ச்சயமாக சூரத்துல் பகரா எந்த வீட்டில் ஓதப்படுகின்றதோ அந்த வீட்டில் இருந்து  சைத்தான் விரன்டோடுவான்" (ஆதாரம் முஸ்லிம் ) அறிவிப்பவர் அபூ ஹுரைரா (ரழி )

  ``குர்ஆனை ஓதுங்கள். ஏனென்றால் அது மறுமை நாளில் அதை ஓதியவருக்கு சிபாரிசு செய்யக் கூடியதாக வரும். சூரத்துல் பகறா, சூரத்துல் ஆல இம்ரான் ஆகிய இரண்டு சூராக்களையும் ஓதுங்கள் மறுமை நாளின் அவை இரண்டும் மேகம் போன்று வரும் 
 • ஆதாரம் : முஸ்லிம் , அறிவிப்பவர் - அபு உமாமா (ரழி )

  எனவே உண்மையை விளங்கி நடபதற்கு அல்லாஹ் தௌபீக் செய்வானாக.